கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

சிறுமியை துஷ்பிரியோகம் செய்த நபருக்கு மறியல்

மட்டக்களப்பில் 16 வயது சிறுமி ஒருவர் குழந்தைக்கு தாயானதையடுத்து குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 51 வயதுடைய தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.றிஸ்வான் நேற்று (09) உத்தரவிட்டார்.

தனியார் காப்புறுதி நிறுவனத்தில் களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதும் 8 மாதங்களும் உடைய சிறுமி ஒருவர் கடமையாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் குறித்த சிறுமியை அந்த நிறுவனத்தின் முகாமையாளர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாகியுள்ளார்.

இதணையடுத்து கற்பம் தரித்த சிறுமி கடமையில் இருந்து விலகி வீட்டில் இருந்துள்ள நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மட்டு போதனா வைத்தியசாலையில் சிறுமிக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் சிறுமி தான் கர்ப்பமாக காரணம் குறித்த முகாமையாளர் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த ஊறணி பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நிறுவன முகாமையாளரை பொலிஸார் கைது செய்தனர்.

Related posts

நல்லூர் தேர்தல் தொகுதி முடிவு வெளியானது

G. Pragas

4 மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல்

Tharani

மாடியில் இருந்து வீழ்ந்தவர் பலி!

G. Pragas

Leave a Comment