செய்திகள் பிரதான செய்தி

சிறுமி துஷ்பிரயோகம்; பெரமுன உறுப்பினர் உட்பட ஐவர் கைது!

மொனராகலை – செவனகல பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தன்மல்வில பிரதேச சபை உறுப்பினர் உட்பட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஐவரையும் வரும் 16ம் திகதி வரை மறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது அம்பாந்தோட்டை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேள இந்த சம்பவத்தை தனது டுவிட்டர் பதிவில் கண்டித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்த விசாரணையில் அரசியல் தலையீடுகள் எதுவும் இடம்பெறாது – என தெரிவித்துள்ளார்.

Related posts

அதிபர் வெற்றிடத்திற்கான நேர்முகப்பரீட்சை அறிவித்தல்

reka sivalingam

மட்டு வைத்தியசாலை வைத்தியர்கள் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்

G. Pragas

எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி

Bavan