கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

சிறுமி பலியான சம்பவம்; வைத்தியர் உட்பட மூவருக்கு பிணை!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிகரித்த மருந்தை வழங்கியதால் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்த சம்வம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் தாதி, மருந்தாளர் மற்றும் நீதிமன்றில் முன்னிலையான வைத்தியர் உட்பட மூவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் தலா 5 இலச்சம் ரூபா கொண்ட இரண்டு சரீரப் பிணையில் எச்சரித்து விடுவித்துள்ளார்.

உவைஸ் பாத்திமா ஜப்றா (14-வயது) என்ற சிறுமிக்கு அதிகரித்த மருந்தை வழங்கியதால் கடந்த (09) பலியானார். சிறுமியின் பெற்றோர் மட்டக்களப்பு தலைமையத்தில் முறைப்பாடு செய்தததையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களான 2ம் ,3ம் எதிரிகளான பெண் தாதி, மருந்தாளர் ஆகிய இருவரையும் பொலிசார் இன்று (12) கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதுடன், சந்தேக நபரான வைத்தியர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் முன்னிலையானார்.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிவான் மூவருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டார்.

Related posts

மசகு எண்ணெய் உற்பத்தி ஆரம்பம்..!

Tharani

அக்கரப்பத்தனை தொழிலாளர்களின் சம்பளத்தில் பிரச்சினை!

Tharani

மட்டக்களப்பில் டெங்கு தாக்கம் குறைகிறது

G. Pragas