கிழக்கு மாகாணம் செய்திகள்

சிறுவனை கடித்து காயப்படுத்திய குரங்கு

திருகோணமலை – மட்கோ பிரதேசத்தில், குரங்கு கடித்ததில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (22) காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்கோ, முகம்மதிய்யா நகர் பகுதியைச் சேர்ந்த கீர்த்தி சிங்க தனுஷன் என்ற 10 வயதுச் சிறுவனே இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டில் இருந்து அருகிலுள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்த வேளையில், பின்னால் சென்ற குரங்கு ஒன்று காலைப் பிடித்த போது சிறுவன் கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து சிறுவனை, குரங்கு கடித்துக் காயப்படுத்தியது.

தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் காலை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தவுள்ளதாக, வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

Related posts

குரல்பதிவில் இருப்பது ரஞ்சனின் குரலே – உறுதியானது!

G. Pragas

ரூ. 5000 நிவாரணம்; மலையக மக்கள் புறக்கணிப்பு!

Tharani

யாழில் உலகத் திருக்குறள் மாநாடு இன்று ஆரம்பம்

Tharani