கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

சிறுவனை காணவில்லை – பொலிஸில் முறைப்பாடு

மட்டக்களப்பு – காத்தான்குடி, டெலிகொம் வீதியில் வசிக்கும் முஹைதீன் அப்துல்லாஹ் என்ற 14 வயதுச் சிறுவனை, நேற்று (21) மாலை முதல் காணவில்லையென, சிறுவனின் பெற்றோர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சிறுவன் வெள்ளை நிற சேட், நீலநிர டெனிம் காற்சட்டை அணிந்து, நேற்று மாலை 6.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் இதுவரை வீடு வந்து சேரவில்லையைன, பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இச்சிறுவனை கண்டவர்கள் அல்லது அவர் தொடர்பான தகவலை அறிந்தவர்கள், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கே.எல்.எம் முஸ்தபா 0778873126 அல்லது சிறுவனின் தநதை முஹைதீன் 0774111196 ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்குமாறு, காத்தான்குடி பொலிஸார் கேட்டுள்ளனர்.

Related posts

“உண்ணாவிரதம் இருக்கவும் தயங்கேன்” – ஸ்ரீ.க.கு சச்சி

G. Pragas

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்

Tharani

அதிகாலையில் கோர விபத்து; அறுவர் பலி!

reka sivalingam