செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தி

சிறுவர் இல்லங்களில் பிள்ளைகள் சேர்ப்பு -– வடக்கில் சடுதியாக அதிகரிப்பு

* பெற்­றோரே ஒப்­ப­டைக்­கின்­ற­னர்
*பொரு­ளா­தார நெருக்­க­டியே கார­ணம்
*முன்­னி­லை­யில் யாழ். மாவட்­டம்

அதி­க­ரித்துவரும் பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக பிள்­ளை­க­ளைப் பரா­ம­ரிக்க முடி­யா­தெ­னத் தெரி­வித்து, சிறு­வர் அபி­வி­ருத்தி நிலை­யங்க­ளில், பெற்­றோ­ரால் ஒப்­ப­டைக்­கப்­ப­டும் பிள்­ளை­ க­ளின் எண்­ணிக்கை வடக்கு மாகா­ணத்­தில் இந்த ஆண்டு சடு­தி­யாக அதி­க­ரித்­துள்­ளது.

அதி­லும் யாழ். மாவட்­டத்­தி­லேயே அதி­க­ள­வான பிள்­ளை­கள் அப்­படி ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்­தத் தக­வலை வடக்கு மாகாண சிறு­வர் நன்­ன­டத்தை மற்­றும் பரா­ம­ரிப்­புத் திணைக்­க­ளம் வெளி­யிட்­டுள்­ளது.

இது தொடர்­பான விவ­ரங்­களை உத­யன் மின்­னஞ்­சல் ஊடா­கக் கோரி திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து பெற்­றுக் கொண்­டுள்­ளது.

வடக்கு மாகா­ணத்­தில் பெற்­றோ­ரால் பரா­ம­ரிக்க முடி­யாது சிறு­வர் அபி­வி­ருத்தி நிலை­யங்­க­ளில் அனு­ம­திக்­கப்­பட்ட பிள்­ளை­க­ளின் எண்­ணிக்கை 2018 ஆம் ஆண்டு 281 ஆகக் காணப்­பட்­டுள்­ளது. 2019 ஆம் ஆண்டு 259 ஆகக் குறை­வ­டைந்­துள்­ளது. 2020ஆம் ஆண்டு 174ஆக அது வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. 2021 ஆம் ஆண்டு 158 ஆக அந்த எண்­ணிக்கை மிகப் பெரிய சரி­வைக் கொண்­டுள்­ளது.

ஆனால் பொரு­ளா­தார நெருக்­கடி உச்­சம் தொட்­டுள்ள நடப்பு ஆண்­டில் முத­லா­வது அரை­யாண்­டில் மாத்­தி­ரம் 246 பேர் சிறு­வர் அபி­வி­ருத்தி நிலை­யங்­க­ளில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.
இந்த ஆண்­டில் யாழ். மாவட்­டத்­தில் 124 பேரும், கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 62 பேரும், முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 45 பேரும், மன்­னார் மாவட்­டத்­தில் 7 பேரும், வவு­னியா மாவட்­டத்­தில் 8 பேரு­மாக 246 பேர் இவ்­வாறு அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்­தச் சடு­தி­யான எண்­ணிக்கை அதி­க­ரிப்­புக்­கான கார­ணம் தொடர்­பில் வடக்கு மாகாண சிறு­வர் நன்­ன­டத்தை மற்­றும் பரா­ம­ரிப்­புத் திணைக்­க­ளத்­தின் ஆணை­யா­ளர் இ.குரு­ப­ர­னி­டம் உத­யன் வின­வி­யது.

‘பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மா­கவே பெற்­றோர் தம்­மால் பிள்­ளை­க­ளைப் பரா­ம­ரிக்க முடி­யாது என்று கூறு­கின்­ற­னர். எமக்கு கிடைக்­கப்­பெ­றும் ஒவ்­வொரு கோரிக்கை தொடர்­பி­லும் கலந்­து­ரை­யா­டல் நடத்­தப்­பட்டு உண்­மை­யில் பெற்­றோ­ரால் பரா­ம­ரிக்க முடி­யா­து­தான் என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே, வடக்கு மாகா­ணத்­தி­லுள்ள பதிவு செய்­யப்­பட்ட சிறு­வர் இல்­லங்­க­ளில் அவர்­கள் சேர்க்­கப்­ப­டு­கின்­ற­னர்’ என்று பதி­ல­ளித்­தார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282