செய்திகள் பிரதான செய்தி

சிறுவர் சத்து குறைபாட்டை ஒழிக்க ஐ.நா சபையுடன் இணக்கப்பாடு

சிறுவர் சத்து குறைபாட்டை ஒழிப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டளவில் சிறுவர் சத்து குறைபாட்டினை ஒழிப்பதற்கு ஐக்கிய நாடுகளினதும் உலக வங்கியினதும் அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நன்றி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

உடனடி உணவு மற்றும் போசணை குறைந்த உணவுப் பழக்கத்தினால் சிறுவர்கள் சத்துக் குறைபாட்டினை எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சத்து குறைபாட்டினை குறைப்பதற்கு வறுமையை ஒழிப்பது முக்கியம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, இதற்காக மக்கள் மயப்படுத்தப்பட்ட பொருளாதார திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கும் என கூறியுள்ளார்.

சுகாதாரத்துறை மற்றும் கிராமிய பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது தௌிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“கப்டன் பண்டிதர்” குடும்பம் நீதிமன்ற உத்தரவில் வீட்டில் இருந்து வெளியேற்றம்!

G. Pragas

தொழிற் பயிற்சிகள் மூலம் வேலைவாய்ப்பு…!

Tharani

யாழ்ப்பாணத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!

Bavan

Leave a Comment