செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

சிறுவர் தினத்தில் நீதி கோரிப் போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று (01) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பேரணியாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் வரை சென்று எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது நூற்றுக்கனக்கான சிறுவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தும் கைது செய்யப்பட்டும் காணாமலாக்கப்பட்டனர்.

எனினும் அச்சிறுவர்கள் இதுவரையில் மீளக் கையளிக்கப்படவில்லை. இதனால் சரணடைந்த சிறுவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறியாத நிலையில், அவர்களை விடுவிக்க வேண்டுமென உறவினர்கள் கோரி வருகின்றனர்.

இதற்கமைய சிறுவர் தினத்தை முன்னிட்டு தமது பிள்ளைகளான சிறுவர்கள் விடயத்தில் அரசாங்கம் பதில் கூற வேண்டுமென வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Related posts

கொழும்பில் 22 மணித்தியாலம் நீர்வெட்டு

reka sivalingam

மகேஸ் சேனநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக நியமனம்!

G. Pragas

இன்றைய இளைஞர்கள் அராஜகப் போக்கை விரும்புவதில்லை

Tharani

Leave a Comment