in ,

சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் சரணடைவு!

கைது செய்யவதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் பிரதான சிறைச்சாலை அதிகாரிகளான சரத் பண்டார மற்றும் நிஷாந்த சேனாரத்ன ஆகியோர் இன்று (29) நீர்க்கொழும்பு நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளுக்கு குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாக குறித்த நபர்கள் உள்ளிட்ட ஏனைய மூன்று அதிகாரிகளையும் கைது செய்யுமாறு கடந்த 22ம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

அதன்படி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பிரதான சிறைச்சாலை அத்தியட்சகர் காலிங்க களுவக்கல அண்மையில் நீதிமன்றில் சரணடைந்ததை தொடர்ந்து இன்றைய தினம் வரையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இன்று மேலும் இரு அதிகாரிகள் சரணடைந்துள்ளனர்.

வவு.மாவட்ட பிரஜைகள் குழுவும் த.தே.ம முன்னணிக்கு ஆதரவு

என்னிடமிருந்து ஒரு ரூபாய் கூட பயங்கரவாத செயலுக்கு போகவில்லை – ரிஷாட்