செய்திகள் பிரதான செய்தி

சிறைப்பஸ் மீது தாக்குதல் நடத்தும் முயற்சியா? பிட்டிபன சம்பவம் குறித்து தீவிர விசாரணை!

கொழும்பு – ஹோமாகமை, பிட்டிபன பகுதியில் நேற்று (29) மின் உபகரண நிலையம் ஒன்றில் 12 துப்பாக்கிகள் மீட்கப்பட்ட விசாரணை சிஜடியிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த துப்பாக்கிகள் சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மின் உபகரண நிலைய உரிமையாளர் மற்றும் சிறையில் உள்ள பாதாள குழு தலைவர்களான கங்கனவின் சகாவும், கொஸ்கட தாரகவுடன் தொடர்புடையவருமான பொட்ட கபில என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை அதிரடிப்படைக்கு 19 துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் கிடைத்த போதிலும் 7 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் துப்பாக்கிகள் மீட்பு தொடர்பில் கொஸ்கட தாரகவிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது.

Related posts

மணல் அகழ்வுக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு!

Bavan

அடக்குமுறைக்கு எதிராக மக்களை அணி திரட்டுங்கள்: சேனாதி

கதிர்

அதிகாரத்துக்கு வர முன்னமே எனது வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது – ரணில்

G. Pragas