செய்திகள் பிந்திய செய்திகள்

சிற்பக் கற்கை நெறி சான்றிதழ் வழங்கலும் கண்காட்சி ஆரம்பமும்

திருமறைக் கலாமன்றக் கலைத்தூது அழகியல் கல்லூரியின் சிற்பக் கற்கை நெறி சான்றிதழ் வழங்கலும் கண்காட்சி ஆரம்பமும் நிகழ்வு இன்று (01) மாலை 4.30 மணிக்கு இலக்கம் – 15, றக்கா வீதி யாழ்ப்பாணத்தில் உள்ள கலைத்தூது கலாமுற்றத்தில் (ஓவியக் கூடம்) இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவ, இஸ்லாமிய நாகரிகத்துறை பேராசிரியர் அருள்திரு ஞா.வி.பிலேந்திரன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கொழும்பு கட்புல ஆற்றுகை கலைகள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் பேராசிரியருமான சரத் சந்திரஜீவா மற்றும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பீட பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா ஆகியோரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

Related posts

எமது காணியை மீட்டுத் தரும் வேட்பாளருக்கே ஆதரவு!

G. Pragas

மாற்றுத்திறனாளிச் சிறுவர்களுக்கான வழிகாட்டல் நிலையம்

G. Pragas

அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக் கோரி போராட்டம்!

G. Pragas

Leave a Comment