செய்திகள் பிரதான செய்தி

சில இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்!

நாட்டின் சில பகுதிகளில் நாளை (12) வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதற்கமைய மன்னார், வன்னி, கம்பஹா, மொணராகலை, முல்லைத்தீவு, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும், வடமேல், வடமத்தி மாகாணங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தோடு, வெப்பமான காலநிலையின்போது வயது முதிர்ந்தவர்களும் நோயாளிகளும் சிறுவர்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Related posts

நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை ஒத்திகை!

கதிர்

ஐநா தீர்மானங்களில் இருத்து இலங்கை அரசு விலகத் தீர்மானம்!

G. Pragas

தமிழ் தேசிய கட்சிகள் ஐந்தின் ஆதரவுத் தீர்மானம் ஒத்திவைப்பு

G. Pragas