செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

சி.ரி ஸ்கானர் ஆரம்பித்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட சி.ரி (CT) ஸ்கான் (Scan) இயந்திரம் இன்று (12) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்காக இரண்டு கோடி ரூபா அன்பளிப்பு செய்த அறக்கொடைச் செம்மல் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இவருடன் இந்த இயந்திரத்தினை வாங்குவதற்கு பொ.றஞ்சன், பி.நந்தபாலன் மற்றும் சமூக ஆர்வலர்களின் நிதிப் பங்களிப்பு மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நவீன சி.ரி ஸ்கானர் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் காலை 8.30 மணிக்கு இடம்பெற்றது.

Related posts

கடலாமை இறைச்சியுடன் பூநகரியில் ஒருவர் கைது

reka sivalingam

நான்கு மாவட்டங்களுக்கு விரைந்த எரிபொருள் ரயில்கள்

கதிர்

60 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

Tharani