செய்திகள் பிரதான செய்தி

சீனாவில் இருந்து அழைத்துவரப்பட்ட 33 மாணவர்கள்…!

சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட இலங்கை பிரஜைகள் 33 பேர் தியத்தலாவை இராணுவ முகாமில் இருந்து அக்குரேகொட இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த இருவாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த குறித்த இலங்கை பிரஜைகளுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படவில்லை என மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இலங்கை பிரஜைகள் 33 பேரை இன்று அவர்களின் வசிப்பிடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்த குறித்த இலங்கையர்கள் 33 பேர் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் கடந்த முதலாம் திகதி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இதற்கமைய கடந்த முதலாம் திகதி தொடக்கம் இன்று வரை குறித்த 33 பேர் விசேட மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக தியத்தலாவை இராணுவ வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத் தொகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சீனப் பிரஜையை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என தொற்றுநோய் தடுப்பு விசேட நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்

Related posts

இந்த அரசு 20 வருடங்கள் ஆட்சியமைக்கும்- கருணா

reka sivalingam

பூஜித – ஹேமசிறிக்கு தொடரும் மறியல்

reka sivalingam

சட்டவிரோத மரங்களை கைப்பற்றியது அதிரடிப்படை

reka sivalingam