in ,

சீன தூதுவர் இருந்த பாக். ஹோட்டலில் குண்டு வெடிப்பு; ஐவர் பலி!

தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள ஒரு ஹோட்டலில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் நேற்று இரவு இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் தீக்கிரையாகின.

சீன தூதுவர் உட்பட சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள் குறித்த ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் சீன தூதர் ஹோட்டலில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

எரிந்த நிலையில் சடலம்; பெண்ணுடையதா?

நீண்ட விடுமுறை வருவதால் பயணக் கட்டுப்பாடு விதிக்க ஆலோசனை!