செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

சுகாதாரத் தொண்டர்கள் நியமனம் ஒத்திவைப்பு; முறையிட 24 மணி நேர அவகாசம்

சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் இன்று (05) காலை வடமாகாண சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேருக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள் சில முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நிமித்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.

இது குறித்து ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

நேர்முகத்தேர்வுக்கு தோற்றியும் இந்த நியமனம் தொடர்பில் பெயர் குறிப்பிடப்படாதவர்களின் மாவட்ட பிரதிநிதிகள் இன்று (05) காலை ஆளுநர் சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேர்முகத்தேர்வில் பங்குபற்றிய அனைவரது புள்ளிவிபரங்களும் அடங்கிய பட்டியல் குறித்த பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அமைச்சினால் வழங்கப்பட்ட கட்டமைப்புக்கு எதிராக அல்லது தவறான நியமனங்கள் வழங்கப்பட்டிருக்குமாயின் அதற்கான பட்டியலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்குறித்த பட்டியலை வடமாகாண சபையின் https://np.gov.lk/marks-details-of-health-volunteers-and-e…/ என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இப்பட்டியலின் மூலம் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெற்றுக்கொண்டுள்ள புள்ளிகள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நியமனத்திற்கு எதிராக இன்று காலை நியனம் வழங்கப்படவிருந்த சாவகச்சேரி நகரசபை மண்டம் அருகே நியமனத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுட்டிருந்தனர். இதன்போது நியமனம் பெற வந்திருந்தவர்களை போராட்டக்காரர்கள் வெளியேறுமாறு குழப்பத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளுப்பட்டனர். இதனையடுத்து நியமனம் பெற வந்தவர்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

செய்தி எழுதிய செய்தியாளர் விசாரணைக்கு அழைப்பு!

G. Pragas

பணம் பெற்று மரண தண்டனைக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டதா?

G. Pragas

சுதந்திர கட்சியின் முடிவு நாளை

G. Pragas

Leave a Comment