in ,

சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா!

சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு அன்ரிஜன் துரித கருவி பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இன்று (22) சற்றுமுன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிசிஆர் பரிசோதனை ஊடான முடிவுக்காக சுகாதார அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அரச தரப்பால் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

சுகாதார அமைச்சில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொற்றுள்ளமை கடந்த சில நாள்களாக கண்டறியப்பட்டு வரும் நிலையில் சுகாதார அமைச்சருக்கும் தொற்றுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பவித்ரா வன்னியாராச்சி ‘கொரோனா தடுப்பு மருந்து என்று கூறப்படும் தம்மிக்க பண்டாரவின் பானி மருந்தை முதன்முதலாக பருகியிருந்தார் என்பதும், கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டுதல் செய்து ஆற்றில் பானை விட்டமை’ உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு!!!

வடக்கில் நேற்று மட்டும் 50 கொரோனாத் தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு!!