செய்திகள்யாழ்ப்பாணம்

சுகாதார உதவியாளராக பணியாற்ற வாய்ப்பு!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சுகாதார உதவியாளர்களாகப் பணியாற்ற தன்னார்வம் கொண்டவர்கள் முன்வர வேண்டும் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவ சேவையைச் சிறப்பாக மேற்கொள்ள 50 சுகாதாரத் தொண்டர்களின் சேவை அவசரமாகத் தேவைப்படுகின்றது.

க.பொ.த. உயர்தரம் கற்ற 25 வயதுக்குக் குறைந்த தன்னார்வலர்கள் இந்தச் சேவைக்கு விண்ணப்பிக்க முடியும். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருந்து 5 கிலோமீற்றர் தூரத்துக்குள் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. இவர்கள் 3 மாத சேவையைப் பூர்த்தி செய்த பின்னர் அவர்களுக்கு தகுதிகாண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

சேவையாற்ற விரும்புபவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளரிடம் விண்ணப்பங்களை நேரடியாகக் கையளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,940