செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

சுகாதார கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடக்கும் – அஜித்

பொது மக்களுக்கான சுகாதார பாதுகாப்போடு நாடாளுமன்ற தேர்தலை நடத்தவே அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

“சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தேர்தல் திணைக்களத்துடனும் சுகாதார திணைக்களத்துடன் இணைந்து தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆராய்வதற்காகவே நாம் வடக்கிற்கு விஜயம் செய்துள்ளோம். வவுனியாவுக்கும் செல்ல நாம் தீர்மானித்துள்ளோம்.

தற்போது நாம் கொரோனா சவாலுக்கு முகம் கொடுத்து வருகிறோம். இது நாடளாவிய ரீதியான ஒரு தேசியப் பிரச்சினையாகத்தான் காணப்படுகிறது. உலக சுகாதார ஸ்தாபனம் எப்போது இந்த வைரஸ் தொற்று இல்லை எனக் கூறுகிறதோ, அதுவரை இதன் தாக்கத்திற்கு நாம் முகம் கொடுத்தே ஆக வேண்டிய சூழ்நிலைக் காணப்படுகிறது.

இந்த நிலையில், எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பது குறித்து நாம் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு உள்ளோம். அதாவது தனிமைப்படுத்தல் சட்டம் சுகாதார நடைமுறைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை பின்பற்றி எதிர்வரும் தேர்தலை நடத்தவே நாங்கள் முயற்சிக்கின்றோம்.

அதேபோல் தேர்தல் திணைக்களமும் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே, சுகாதார வழிகாட்டல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கிறோம். தேர்தல் வன்முறையில் எவர் ஈடுபட்டாலும் அந்த நபருக்கு எதிரான சட்ட நடவடிக்கையை எடுக்க பொலிஸார் தயாராகவே உள்ளனர் என்பதையும் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம்” – என்றார்.

Related posts

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்படவில்லை- திஸநாயக்க தெரிவிப்பு

reka sivalingam

போதைப் பொருட்களை கைப்பற்றி விற்ற பொலிஸார் நால்வர் கைது!

G. Pragas

கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு

reka sivalingam