செய்திகள் பிரதான செய்தி

இந்தியாவுக்கான போலந்து தூதுவர் – சுசில் சந்திப்பு

பதில் வெளிவிவகார அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் இந்தியாவுக்கான போலந்து தூதுவர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று  இடம்பெற்றது.

வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கம் இந்த தகவலை  வெளியிட்டுள்ளது.

இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் போலந்து தூதுவரிடம் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியாவுக்கான போலந்து தூதுவர் இலங்கை வர்த்தக சமூகத்தினரை  நேற்று சந்தித்துள்ளதுடன், வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியுள்ளதாக இந்தியாவுக்கான போலந்து தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவுகள் குறித்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் இந்தியாவுக்கான போலந்து தூதுவர் உரை நிகழ்த்தியுள்ளதாகவும், அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சின் ஆசிய பிரிவுக்கான தலைவர் தியர்ரி மெத்தோ (Thierry Mathou) தலைமையிலான தூதுக் குழுவினர், பதில் வெளிவிவகார அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, எதிர்கால ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

வரலாற்றில் இன்று: ஜனவரி 07

Tharani

சட்டவிரோத குடியேற்றம்: 175 பேர் கைது

Tharani

யாழ் வாசிகள் 9 பேர் குணமடைந்தனர்!

G. Pragas