கிழக்கு மாகாணம் செய்திகள்

சுஜித் நிலைமை வராமலிருக்க பெற்றோர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளில் கூடியளவு கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி வீழ்ந்த சுர்ஜித் என்ற சிறுவனின் நிலமை தொடர்பாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் வாகரை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வாகரை கலாச்சார மண்டபத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுவர்களையும் முதியோர்களையும் வழிநடத்துகின்ற பொறுப்பும் தார்மீக கடமைகளும் எம் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் உண்டென்றும், சிறுவர்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தபடுகின்றமை குறிப்பாக உறவினர்களால் இவ்வாறான செயற்பாடுகளை நிகழ்த்துகின்றமையை சமூகத்தினர் மத்தியில் சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அதேபோன்று முதியவர்கள் அனாதரவாகவும் அனாதை இல்லங்களிலும் கைவிடப்படுகின்றமை மிகுந்த மனவேதனைக்குறிய செயலாகும். இன்றைய முதியவர்களே நேற்றைய தலையவர்களாகும் தாய், தந்தையினராகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும், அரசியல்வாதிகளாகவும் மிளிர்ந்தவர்கள் ஒதுக்கப்படுவது என்பது ஏற்றக் கொள்ள முடியாத கருத்தாகும்.

இன்றைய சிறுவர்கள் நாளையத லைவர்கள் போன்று நேற்றைய தலைவர்கள் இன்றைய முதியோர்கள் இன்றைய தலைவர்களாக இருக்கின்ற நாம் நாளை முதியவர்களாகும் நிலை ஏற்படும். இந்நிலையில் சிறந்த சமூகத்தை உருவாக்கி சிறுவர், முதியோர் மற்றும் அனைவருக்கும் சிறந்த பாதுகாப்பினையும் நல்வழியையும் எற்படுத்த வேண்டும் என்றார்.

கல்குடா கல்வி வலய பணிப்பாளர் தினகரன் ரவி, கோட்டக் கல்வி அதிகாரி, வாகரை பிரதேச சபையின் செயலாளர், வேல்ட்விசன் நிறுவனத்தின் முகாமையாளர் இ.பிரகாஷ்குமார், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.அழகுராஜ் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், வாகரை பிரதேச சிறுவர்கள், முதியோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தில் சிறார்கள் மத்தியில் ஏற்படுத்தி வைக்கப்பட்ட கட்டுரை, கவிதை, பேச்சு, நடனம், குழு நாட்டியம் ஆகிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றுதல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அத்தோடு உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தினை முன்னிட்டு அரும்பு 12 சஞ்சிகையின் முதல் பிரதியினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாருக்;கு வாகரை பிரதேச செயலாளர் எஸ்.கரனினால் வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.

மகுடம் எஸ்.கோவரண்டினா, சிறுவர் அபிவிருத்தி திணைக்களம், சிறுவர் பாதுகாப்பு சபை, வேல்ட் விசன் லங்கா, வாகரை பிரதேசமும் இணைந்து இவ்வுலக சிறுவர், முதியோர் தினத்தினை ஏற்பாடு செய்திருந்தனர். (கு)

Related posts

குளவி கொட்டியதில் சிறுவர்கள் உட்பட அறுவர் பாதிப்பு!

G. Pragas

மக்கள் விரும்பும் தலைவன் சஜித் – ஹரிசன்

G. Pragas

லொக்காவின் சகாக்கள் மூவர் கைது!

G. Pragas