செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றப்பட்டது.

யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்,மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை, அவரது வீட்டிற்கு சென்ற ஆயுதாரிகள் நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலக அழகி கொழும்பில் கண்ணீருடன்!

Tharani

மும்பையில் வெங்காயத் திருட்டு- இருவர் கைது!

reka sivalingam

மாத்தறையில் இன மோதல்! கட்டுக்குள்

G. Pragas