செய்திகள் பிராதான செய்தி முல்லைத்தீவு

சுதந்திரபுரத்தில் மனித எச்சங்கள் மீட்பு! நாளை அகழ்வு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் இன்று (20) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சுதந்திரபுரம் கொலனி பகுதியில் தனியார் ஒருவரது காணியின் ஒருபகுதியில் மண் எடுத்து மறுபகுதியில் கொட்டப்பட்டது. இதன்போது எடுக்கப்பட்ட மண்ணில் புதையுண்ட நிலையில் மனித எச்சங்கள் அதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தினை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸார் இடங்களை அடையாளப்படுத்தியுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள எலும்புக்கூடு எச்சங்களை மீட்பதற்கு நாளை (21) நீதிமன்ற உத்தரவு பெற்று நீதிபதி மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து குறித்த மனித எச்சங்களை மீட்கவுள்ளனர்.

Related posts

கந்தசுவாமி ஆலய முன்றலில் திலீபனின் நினைவேந்தல்!

G. Pragas

சமூக வலைத்தளப் பிரச்சாரம் – 162 முறைப்பாடுகள்

G. Pragas

முன்னாள் சுங்கப் பணிப்பாளர்களை கைது செய்ய உத்தரவு!

G. Pragas

Leave a Comment