செய்திகள்

சுதந்திர கட்சியை ராஜபக்சாக்கள் புதைத்து விட்டனர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பயணத்தை ராஜபக்சாக்களே முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர் என்று ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பேருவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்,

பண்டாரநாயக்க குடும்பத்தினர் காத்துவந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ராஜபக்‌சாக்கள் குழி தோண்டி புதைத்துவிட்டதுடன் இன்று கட்சியின் பயணத்தை இறுதி நிலைக்கே கொண்டுவந்து விட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியில் குடும்ப ஆதிக்கத்தை கண்டே பண்டாரநாயக்க அதிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சிறந்த நலத்திட்டங்களை செயற்படுத்தி, அதனூடாக மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கியது. பின்னர் பண்டாரநாயக்க மரணமடைந்த போதும் கூட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை யாராலும் ஏதும் செய்ய முடியவில்லை. ஆனால் இன்று ராஜபக்ஷகளினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப முடியாத நிலைமை உருவாகியுள்ளது – என்றார்.

Related posts

சிங்கள மக்களுக்கு நன்றி – நான் கேட்டும் சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லை

G. Pragas

வந்துரம்ப பகுதி விபத்தில் ஒருவர் பலி

admin

தாமரை மொட்டினை பற்றிக் கொண்ட “கை”

G. Pragas

Leave a Comment