செய்திகள்

’சுனாமி பேபி 81’ என அழைக்கப்பட்டவர் வீட்டில் அஞ்சலி!

சுனாமி அனர்த்தத்தில் காணாமற்போய், பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு, 09 தாய்மார்களால் உரிமை கோரப்பட்ட “சுனாமி பேபி 81” என்ற கல்முனையைச் சேர்ந்த ஜெயராஜ் அபிலாஸ், தனது களுதாவளை இல்லத்தில் நிர்மாணத்துள்ள நினைவுத் தூபியில், இன்று (26) மலரஞ்சலி செலுத்தினார்.

67 நாட்களேயான அபிலாஸ், கடலலைகளால் அள்ளுண்டு செல்லப்பட்டு, அரை நாள்களின் பின்னர் பாறையொன்றினுள் புகுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் தாதியர்களின் பராமரிப்பில் வைக்கப்படடிருந்த அபிலாஸை, 09 தாய்மார்கள் தமது பிள்ளையென உரிமை கோரியபோது, நீதிமன்றம் சென்று, டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் தந்தையான ஜெயராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது 10ஆம் ஆண்டில் கல்வி பயிலும் உலகப்புகழ் பெற்ற அபிலாஸ் ஒரு வைத்தியராகவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.

Related posts

ஒழுக்க விதிகளை மீறியவர்களின் கட்சி உறுப்புரிமை ரத்து!

Tharani

பெண் சடலமாக மீட்பு!

reka sivalingam

இன்றைய நாள் ராசி பலன்கள் (2/3) – உங்களுக்கு எப்படி?

Bavan