செய்திகள் யாழ்ப்பாணம்

சுன்னாகத்தில் நாளை முதல் ‘கிராமச்சந்தைகள்’

“நாட்டில் தற்போது எழுந்துள்ள கொரோனா அச்சம் நீடித்து வரும் நிலையில் அமுலில் உள்ள ஊரடங்கு நேற்று (24) 8 மணி நேரம் தளர்த்தப்பட்டிருந்தது. இதன்போது எமது பொதுச் சந்தைகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சன நெரிசல் இருந்தமை கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடிய ஏதுநிலையை உண்டாக்கும் என்று சுகாதார துறையினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான சன நடமாட்டத்தையும் நெருசலையும் குறைப்பதற்கு நாம் சுகாதாரத் துறையினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடனும் இணைந்து சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.”

இவ்வாறு வலி தெற்கு (சுன்னாகம்) பிரதேச சபையின் தவிசாளர் க.சுதர்சன் தெரிவித்தார். மேலும்,

ஊரடங்கு அமுலில் இருக்கின்ற போது எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு கிராமங்கள் தோறும் பொலிஸாரின் அனுமதியுடன் சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் கிராமச் சந்தைகள் அமைக்கப்படவுள்ளது.

எனவே அத்தியாவசிய பொருட்கள் தேவையானவர்கள் மட்டும் குறித்த சந்தைகளுக்கு சென்று மரக்கறிகள் மற்றும் பலசரக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

நாளை (26) முதல் கிராமச் சந்தைகள் இயங்க ஆரம்பிக்கும். சந்தைகள் இயங்கவுள்ள இடங்கள் பற்றி எமது சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் முழுவதுமாக ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களான கையுறை மற்றும் முகக்கவசம் (மாஸ்க்) அணியாமல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டால் எனக்கு (தொ.இ – 0777336361) அல்லது பொதுச்சுகாதார பரிசோதகர்களிடம் உடனடியாக முறையிட முடியும். – என்றார்.

Related posts

தட்டிக் கேட்டதால் எனக்கு எதிராக போராட்டம் – தேவாமிர்ததேவி

G. Pragas

இலங்கையில் புதிய தொலைக்காட்சி சேவை! – கல்வி அமைச்சு

Tharani

சர்வாதிகார போக்கில் அரசு – சுமந்திரன் குற்றச்சாட்டு!

G. Pragas