செய்திகள் யாழ்ப்பாணம்

சுன்னாகம் பேருந்து நிலையத்தில் பத்திரிகை வாசிக்க வசதி

தேசிய வாசிப்பு மாதம் ஆரம்பமாகியுள்ளதைத் தொடர்ந்து வலி தெற்கு பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சுன்னாகம் பேருந்து நிலையத்தில் பயணிகள் வாசிப்பதற்கு பத்திரிகை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பேருந்துகளுக்காக காத்திருக்கின்ற பயணிகளில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்த ஏற்பாடு இன்று முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வலிதெற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.தர்சன் கலந்து கொண்டார்.

சுன்னாகம் பொது நூலகத்தின் இச்செயற்பாட்டிற்கு பயணிகள் ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் உள்ளூர் மற்றும் தமிழக சஞ்சிகைகளும் பேருந்து நிலையத்தில் வைக்கப்படும் என நூலக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

வலி தெற்கு பிரதேச சபையின் இச்செயற்பாட்டிற்கு பயணிகள் பலரும் பெரும் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.

Related posts

முச்சக்கர வண்டி வான் ஒன்றுடன் மோதிய பதிவு

Tharani

பல்கலை வாய்பை பெறாத மாணவர்களுக்கு தொழில் நுட்பவியல் பட்டம்

Tharani

நாளை எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்!

G. Pragas

Leave a Comment