செய்திகள் யாழ்ப்பாணம்

சுன்னாக நகர் இளைஞர்களின் முன்மாதிரியான செயல்!

வண்ணமயமிக்க சுன்னாக நகரினை அழகாக்குவோம் என்ற தொனிப்பொருளில் , சுன்னாகம் இளைஞர்கள் மற்றும் அளவெட்டி இளைஞர்கள் இணைந்து இன்றைய தினம் வண்ணமயமான சுவர் ஓவியங்கள் வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கும் அருகிலும் நவீன சந்தைக் கட்டிடத் தொகுதி பகுதிகளிலும் கடந்த வாரங்களில் யாழ் மாவட்ட இளைஞர் அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து சுவர் ஓவியங்களை வரைந்திருந்தனர்.

குறித்த சுவரோவியங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் கவரப்பட்ட நிலையில் அதனை அரசியல்வாதிகள் நேரடியாகச் சென்று பார்வையிட்டு உதவிகளையும் வழங்கி இருந்தனர்.

இதனையடுத்து சுன்னாகம் மத்திய பேருந்து நிலையம், மற்றும் பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதிகளில் சுவர் ஓவியங்கள் வரையும் நடவடிக்கையில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இந்த ஓவியங்கள் யாழ்ப்பாண நகரை பிரதிபலிக்கக் கூடிய ஓவியங்களாகவும் சிந்தனையைத் தூண்டக்கூடிய ஓவியங்களாகவும் காணப்படுகின்றமை சிறப்பம்சம்.

Related posts

மழைவீழ்ச்சி இன்மையால் மின்சாரம் பாதிப்பு

Tharani

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழப்பு

கதிர்

இலஞ்சம் பெற முயற்சித்த பொலிஸ் அதிகாரி கைது

reka sivalingam

Leave a Comment