செய்திகள் யாழ்ப்பாணம்

சுமந்திரன் மீது இல்லாத நடவடிக்கை என் மீது ஏன்? – விமலேஸ்வரி கேள்வி!

சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் மீது எடுக்கப்படாத நடவடிக்கை தன்மீது மாத்திரம் எவ்வாறு எடுக்கப்பட்டது என தமிழரசுக் கட்சியின் மகளிரணித் தலைவியான விமலேஸ்வரி கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிரணித் தலைவியான விமலேஸ்வரி அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் அவரை குறித்த பதவியில் இருந்தும், கட்சி உறுப்புரிமையில் இருந்தும் நீக்குவதாக, அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விடயம் குறித்து அவர் ஊடகங்களுக்கு இதன்போது தெளிவுபடுத்தினார். மேலும்,

“சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கட்சியினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலைமையில் தற்போது என் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் என்பதால் மட்டுமே என் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? கட்சியின் குறித்த நடவடிக்கை எதற்காக எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக கட்சி அனைவருக்கும் தெளிவுபடுத்த வேண்டும்” – என்றார்.

Related posts

குடத்தனையில் தடைவைத்து கண்காணிக்கும் இளைஞர்கள்!

reka sivalingam

போதைக்கு அடிமையான பலருக்கே கொரோனா! – புலனாய்வுத் தகவல்

G. Pragas

சுகாதார அறிக்கைகளில் அக்கறை செலுத்தி தேர்தல் முடிவை எடுங்கள்

G. Pragas