செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

சுமந்திரனுக்கு பொம்மை வைத்து செருப்பணிவிப்பு!

ஆயுதப் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக நல்லூரில் இரு இடங்களில் உருவ பொம்மைகள் வைக்கப்பட்டன.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கு அண்மையில் உருவ பொம்மை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படிருந்த வேளையிலேயே இனம் தெரியாத நபர்களால் சுமந்திரனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து வீதியோர மின் கம்பத்துடன் கட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, நல்லூர் செம்மணி பகுதியிலும் இதுபோன்ற உருவ பொம்மை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (13) காலை பொலிஸாரால் குறித்த உருவ பொம்மைகள் அகற்றப்பட்டன.

Related posts

பருத்தித்துறையில் பெற்றோல் ஊற்றி கடை எரிப்பு!

G. Pragas

தரம் குறைந்த 34 ஆயிரம் முகத்திரைகள் கைப்பற்றல்

G. Pragas

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின

G. Pragas