கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

சுமந்திரனுக்கு போராட்டத் தியாகங்கள் தெரியாது – கருணா!

சுமந்திரனுக்கு தமிழ் மக்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. இவருக்கு வடக்கு கிழக்கில் நடந்த படுகொலைகளை போராட்டமும் தியாகங்களும் எதுவும் தெரியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கல்முனை பகுதியில் இன்று (13) முற்பகல் கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு மேற்கண்டவாறு கூறினார். மேலும்,

சுமந்திரன் அரசியலில் உறுதியானவராக நான் கருதுவதில்லை ஏனென்றால் வடகிழக்கில் தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்கள், தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட படுகொலைகள் பற்றி அறிந்திராதவர் வரும் அரசாங்கத்தின் ஆட்சியாளர்களது வாலை பிடித்து திரிபவர் என்பதனை தற்போது வெளிக்காட்டியுள்ளார்.

சுமந்திரனுக்கு தமிழ் மக்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. இவருக்கு வடக்கு கிழக்கில் நடந்த படுகொலைகளை போராட்டமும் தியாகங்களும் எதுவும் தெரியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இவருக்கும் சம்பந்தருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது அது என்னவெனில் தேர்தல் காலங்களில் நிதி கையாடல்களை மேற்கொள்ள தான் சம்பந்தன் ஐயா தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு தூக்கி எறியாமல் வைத்திருக்கின்றார் – என்றார்.

Related posts

அரச அதிபருக்கு ஆனோல்ட் எழுதிய கடிதம்!

G. Pragas

ஹெரோயினுடன் கைதான மதுசங்கவுக்கு தடை!

G. Pragas

அவுஸ்திரேலியாவில் சூறாவளி – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

reka sivalingam