செய்திகள் பிரதான செய்தி

சுய தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க விசேட நடவடிக்கை

தென்மாகாணத்தில் ஆயிரத்து 572 பேர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாக தென்மாகாண ஆளுநர் விலி கமகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய காலி மாவட்டத்தில் 609 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 383 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 580 பேரும் தங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் 150 பேர் காலி மற்றும் அம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இவர்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் கண்காணிக்கப்படுவதாக காலி துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பொது மக்கள் முறைப்பாடு – அனைத்து பேருந்துகளிலும் மாற்றம்!

Tharani

தமிழ் மக்கள் அதிகம் வாக்களிக்க வேண்டும்

G. Pragas

தரிப்பிட கட்டணம் செலுத்தாத கார்களுக்கு சீல்

Tharani