in ,

சுழன்றடிக்கிறது கொவிட் அலை! – இன்று 892 பேர் தொற்றுடன் அடையாளம்!!

இலங்கையில் மேலும் 892 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, இலங்கையில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 271 பேருக்கு இதுவரையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 266 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இதுவரை நாட்டில் 644 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற சிலருக்கு தொற்று!! – வடக்கில் இன்று 15 பேர் அடையாளம்!!

பல பாடசாலைகளுக்குப் பூட்டு!! – கொரோனா தீவிரத்தால் அவசர முடிவு!!