சினிமா செய்திகள்

சுஷாந் சிங் மரணம்; நடிகை ரியாவின் சகோதரர் கைது!

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பான வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் அவரது முன்னாள் தோழி ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் சோஷவிக் சக்ரவர்த்தியை போதைப் பொருள் கடத்தல் தடுப்புத்துறையினர் நேற்று (04) கைது செய்துள்ளனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் தங்கியிருந்த வீட்டின் மேலாளர் சாமுவேல் மிராண்டாவின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சோஷவிக், சாமுவேல் மிராண்டா ஆகிய இருவரையும் அதிகாரிகள் விசாரணைக்காக அவர்களின் அலுவலகத்துக்கு அழைத்தச் சென்றனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் நேற்று கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.

Related posts

டக்ளசும் அதாவுல்லாவும் விமலுக்கு கற்பிக்க வேண்டும்

G. Pragas

வௌ்ளை வான் விவகாரம் ‘பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்’: ஐதேக

கதிர்

பெளத்தர்களே பெளத்த மதத்தை நிந்தித்தார்கள்- மஹிந்த

reka sivalingam