செய்திகள் வணிகம்

சூழல் நட்புறவு நிறுவனமாக நிலை நிறுத்திய Singer Sri Lanka PLC நிறுவனம்

Singer Sri Lanka PLC நிறுவனமானது Singer Green Inverter தயாரிப்பு வரிசையை உள்நாட்டு வளிச்சீராக்கி துறைக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் சூழல் நட்புறவு நிறுவனமாக தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.

பசுமைப் புரட்சியை முழுமையாகத் தழுவுவதற்கான சிங்கரின் தூர நோக்கு பார்வையை சிங்கர் வளிச் சீராக்கிகளின் green inverter தயாரிப்புகள் பிரதிபலிக்கின்றன.

Singer Green Inverter வளிச்சீராக்கி தொடரானது உலகின் மிகவும் சூழல் நட்பு குளிர் பதனூட்டியான (R32) ஐ பயன்படுத்துவதன் மூலம் சூழல் நட்புறவான அதிக ஆற்றல் திறனை அடைய உதவுகின்றது. இது புவி வெப்பமடைதலைக் குறைப்பதன் மூலம் 0% ஓசோன் சிதைவு திறன் மற்றும் குறைந்தபட்ச சுற்றுச்சூழல் தாக்கத்தை உறுதி செய்கிறது.

Singer Sri Lanka PLC இன் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் குமார் சமரசிங்க இது தொடர்பில் விளக்கமளிக்கையில்; “எமது நுகர்வோர் அனைவருக்கும் ஆடம்பரத்தை வழங்கும் அதேவேளை பசுமைப் புரட்சியின் உறுதியான ஊக்குவிப்பாளராகும் சிங்கரின் முயற்சியானது, சில்லறை அல்லது உள்ளூர் சந்தைகளிலும், green inverter உற்பத்திகளை ஊக்குவிக்கும் முயற்சியின் மூலம் ஊர்ஜிதமாகின்றது. சிங்கரின் green inverter வளிச் சீராக்கிகள் 50% சக்தியை சேமிக்கின்றன.

இலங்கையில் நிலவும் வானிலை மற்றும் எரிசக்தி செலவினங்களின் மேலதிக போக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் போது, தகுந்த நீடித்து நிலைக்கும், செலவு குறைந்த வளிச்சீராக்கி தீர்வுகளை நுகர்வோருக்கு வழங்க வேண்டியது அவசிய தேவையாகின்றது.

அந்த வகையில், சிங்கரின் green inverter உற்பத்தி வரிசையானது வளிச் சீராக்கிக்கான மொத்த செலவை குறைப்பதோடு, மின் பாவனையை குறைக்கும் வளிச் சீராக்கி தீர்வுகளை எதிர்ப்பார்க்கும் நுகர்வோருக்கு சிறந்த தெரிவாகும்.

“Singer Sri Lanka PLC அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தீர்வுகளை வழங்க உறுதிபூண்டுள்ளதுடன், இது எம்மை துறைசார் போட்டியாளர்களுக்கு மத்தியில் உயர்ந்து நிற்கச் செய்கின்றது. சுற்றுச்சூழல் மீதான பாதகமான விளைவைக் குறைக்கும் நிலைபேறான தயாரிப்புகளில் கவனம் செலுத்துவது எங்கள் பொறுப்பு என்றும் நாங்கள் நம்புகிறோம்.

Green Inverter வரிசை வளிச்சீராக்கிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், வறண்ட காலங்களில் வளிச்சீராக்கிகளை அதிகப்படியாக பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய கார்பன் வெளியேற்றத்தை எங்களால் குறைக்க முடிகிறது,” என்று சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

Singer Sri Lanka PLC நிறுவனமானது விற்பனை செயன்முறையின் ஆரம்பம் முதல் இறுதி வரையான சேவை மேன்மை மற்றும் கடுமையான தொழில்முறைசார் அணுகுமுறைக்கும் உறுதிபூண்டுள்ளது. Singer Air Conditioning வியாபாரமானது ஈடு இணையற்ற விற்பனைக்கு பின்னரான சேவைகள் மற்றும் நம்பகமான சிங்கர் உத்தரவாதத்திற்கு பெயர்பெற்றது.

இந் நிறுவனம் உயர் தரமான சர்வதேச வர்த்தக நாமங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நன்கறியப்பட்டதுடன், 450 விற்பனை நிலையங்கள் மற்றும் பரந்துபட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் அதற்கு சமமாக ஸ்தாபிக்கப்பட்ட விற்பனைக்கு பின்னரான சேவை வலையமைப்பு ஆகியவற்றின் ஊடாக தனது வாடிக்கையாளர் தளத்துடன் இணைந்துள்ளது. தொடர்ச்சியாக பதின்மூன்று ஆண்டுகளாக இந்நிறுவனம் நாட்டில் முதலிடத்தில் உள்ள மக்களின் வர்த்தகநாமமாக தெரிவாகியுள்ளது.

Related posts

வரவு செலவு திட்டம் 10 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

Tharani

மஹகந்த வனப்பகுதியில் தொடரும் தீ!

reka sivalingam

கொரோனாவை எதிர்த்து போர்; இலங்கைக்கு அமெரிக்கா உதவி

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.