இந்திய செய்திகள் செய்திகள்

சென்னையிலும் எழுக தமிழ்!

இலங்கையில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் தமிழ் மக்கள் பேரவையால் ஒருங்கிணைத்து நடாத்தப்பட்ட எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு வலுச்சேர்ககும் முகமாக தமிழகம் – சென்னையில் தமிழக வணிகர் சங்க பேரவையால் ஒருங்கிணைத்து எழுக தமிழ் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் பல்வேறு ஈழ ஆதரவு கட்சி இயக்கங்கள் கருத்து வேறுபாடுகள் கடந்து கலந்து கொண்டன. இதன்போது இனப்படுகொலைக்கு நீதி வேண்டி கோசங்கள் எழுப்பப்பட்டது.

இப்போராட்டத்தில் பழ நெடுமாறன், தொ திருமாவளவன், தமிமுன் அன்சாரி, தனியரசு, கௌதமன், சாஹுல் ஹமீது உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Related posts

நாடாளுமன்ற தெரிவுக்குழு

Tharani

கலைப் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் சாதனை

Bavan

திடீரென சாய்ந்த கட்டிடம்; பதறியோடிய மக்கள்!

reka sivalingam