in , ,

சேதனப் பசளை உற்பத்தித் திட்டம் கிளிநொச்சி, முல்லையில் ஆரம்பம்!

சேதனப் பசளை உற்பத்தித் திட்டம் கிளிநொச்சி, முல்லையில் ஆரம்பம்!

குறுகிய காலப்பகுதியில் தரமான சேதனப் பசளையை விவசாயிகள் தாங்களே உற்பத்தி செய்யும் நோக்கில் “சேதனப் பசளை உற்பத்தித் திட்டம் ” ஒன்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
உலக வங்கி நிதி அனுசரணையுடன் விவசாய அமைச்சின் கீழ் மண்டக்கல்லாறு மற்றும் பேராறு நீரேந்துப் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப சேதனப் பசளை உற்பத்திக்கான உள்ளீடுகள், உபகரணங்கள், பயிற்சிகளை வழங்குவதோடு தொடர்ச்சியாக கண்காணித்து விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

மறைத்து வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு!

மின்னல் காரணமாக எரிந்த மின் உபகரணங்கள்!