செய்திகள்

சேலை அழகு என்பதற்காக அழகு ராணி போட்டியில் வெற்றியீட்ட முடியாது…!

புடவை அழகு என்பதற்காக அழகு ராணி போட்டியில் வெற்றி பெற்று விட முடியாது. எனவே தேர்தல் குறித்து கூடிய அவதானம் செலுத்தி செயற்பட வேண்டும். தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் ஜக்கிய தேசியக் கட்சி தாக்கல் செய்தவையாகவே மக்கள் கருதுகின்றனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதே போன்று ஜனாதிபதியின் வர்த்தகமானி அறிவிப்பு காலவதியாகியுள்ளது. அரசியலமைப்பினை மீறாது பாதுகாக்க வேண்டுமாயின் நாடாளுமன்ற அமர்வை ஆகஸ்ட் வரை ஒத்தி வைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும். இருப்பினும் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் திகதியை ஜனாதிபதி அறிவித்தே ஆக வேண்டும் என ரணில் கூறினார்.

ஜ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டிய இல்லத்தில் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.

Related posts

கிளிநொச்சியில் ‘கொரொனா’ வைத்தியசாலைக்கு எதிர்ப்பு

கதிர்

கொழும்பு – யாழ் இடையில் புதிய விமான சேவை

reka sivalingam

சட்டவிரோமாக நாட்டில் தங்கியிருந்த சுவிஸ் நாட்டவர்கள் கைது!

Tharani