செய்திகள்

சைவப் பரிபாலன சபை பரீட்சை பிற்போடல்; ஆசிரியர்கள் விசனம்

சைவ பரிபாலன சபை பரீட்சை பிற்போடப்பட்டு பாடசாலை நாளில் வைப்பதற்கு அதிபர் ஆசிரியர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

சைவ பரிபாலன சபை பரீட்சை நேற்று (26) சனிக்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் தவிர்க்க முடியாத காரணத்தை குறிப்பிட்டு பரீட்சை பிற்போடப்பட்டு 30ம் திகதி நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விசனம் வெளியிட்டுள்ள ஆசிரியர்கள்,

“3ம் தவணை காலத்தில் பாடசாலைகளில் பாடத்திட்டங்களை முடித்து பரீட்சைக்கு தயார்ப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கின்றது. இதனை விட க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் முன்னோடி பரீட்சைகள் நடைபெற்று வருகின்றது.

இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில் சைவ பரிபாலன சபை பரீட்சையும் பாடசாலை நேரத்தில் வைப்பது மாணவர்களின் கல்வியை பின்னோக்கி கொண்டு செல்லும் செயற்பாடாகும்.

எனவே பாடசாலை விடுமுறை நாட்களில் சைவ பரிபாலன சபை பரீட்சையை நடாத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

இராணுவ பிரசன்னம் வீதிகளில் அதிகரிப்பு

Bavan

கொரோனா தீவிரம்; ட்ரம்பினால் ட்ரில்லியன் கணக்கில் நிவாரண ஒதுக்கீடு!

Bavan

பிரமாண்டமான முறையில் நல்லூரில் மாவீரர் நினைவாலயம்

G. Pragas