கிழக்கு மாகாணம் செய்திகள்

சௌபாக்கியா வீட்டுத் தோட்டம் ஆரம்பித்து வைப்பு

பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கும் திட்டததின் கீழான “சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்” இன்று (09) வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்களத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் உள்ள மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் முதற்கட்டமாக ஐநூறு குடும்பங்களுக்கு சௌபாக்கியா வீட்டுத் தோட்டத்திற்கான கத்தரி, மிளகாய், புசித்தாய், வெண்டி, போஞ்சி போன்ற ஐந்து வகை பயிர்களுக்கான விதைகள் வழங்கப்பட்டதுடன், பழ மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

வாழைச்சேனை கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.ரஷீட்; தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத், வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பழமரக் கன்றுகளையும், மக்கறி வகைகளின் விதைகளையும் வழங்கி வைத்தனர். (150)

Related posts

16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்!

G. Pragas

வெளிநாட்டு வாழ் இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Bavan

சுவிஸ் தூதரக ஊழியரிடம் இன்று 6 மணி நேரம் விசாரணை

G. Pragas