கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

ஜனநாயக உரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும் – மட்டு.அரச அதிபர்

பொதுமக்கள் தமது ஜனநாயக உரிமையினை சரியாகப் பயன்படுத்த வேண்டுமென மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய கலாமதி பத்மராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவட்ட செயலகத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“இம் மாவட்டத்தில் உள்ள கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு ஆகிய 3 தேர்தல் தொகுதிகளிலும் 4 இலட்சத்து 9 ஆயிரத்து 808 வாக்காளர்கள் 5 நாடாளுமன்ற பிரதிநிகளைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கவுள்ளனர்.

இதற்காக 16 அரசியல் கட்சிகளையும், 22 சுயேச்சைக்குளுக்களையும் சேர்ந்த 304 அபோட்சகர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் 12 ஆயிரத்து 815 அஞ்சல் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதில் 97 சதவீதமான அஞ்சல் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழமைக்கு மாறாக இம்முறை கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுகாதார விதிமுறைகளைப் பேனி இத்தேர்தல் நடத்த சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. மேலும் இத்தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் 194 வாக்கெடுப்பு நிலையங்களும், கல்குடா தொகுதியில் 119 வாக்கெடுப்பு நிலையங்களும், பட்டிருப்புத் தொகுதியில் 115 வாக்கெடுப்பு நிலையங்களுமாக மொத்தம் 428 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்புக் கடமைகளுக்காக இம்முறை 4 ஆயிரத்து 710 அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர்கள் தமது சுகாதார நலகன் கருதி வாக்களிக்கச் செல்லும் போது போனாக்களைக் கொண்டு செல்லுமாறும் கட்டயாம் முகக்கவசம் அணிந்து வருமாறும், வாக்குச் சாவடிக்குள் நுழையும்போதும், வாக்களித்து விட்டு வெளியேறும்போதும் தொற்று நீக்கித்திரவம் கொண்டு வாக்காளர் தமது கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளுமாறும்” – அரசாங்க அதிபர் மக்களை கேட்டுக் கொண்டர். (150)

Related posts

வறட்சி காரணமாக இலட்சக் கணக்கில் மக்கள் பாதிப்பு!

Bavan

முல்லை வாசிகள் மூவருக்கும் கொரோனா இல்லை!

G. Pragas

கொவிட்-19; கொழும்பு மாவட்டத்தில் மக்கள் அதிகளவில் பாதிப்பு!

Tharani