செய்திகள்பிந்திய செய்திகள்

ஜனாதிபதியின் அதிகாரங்களை பெறவே 19ம் திருத்தம் வந்தது – தயாசிறி

ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களை பெற்றுக் கொள்வதற்காகவே 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டது என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (21) நாடாளுமன்றில் இடம்பெற்ற அரசியலமைப்பின் 20வது திருத்த சட்ட மூலம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பொறுப்பேற்ற போது ஜனநாயகம் தொடர்பில் அனைவரும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் தங்களால் பெற்றுக்கொள்ளமுடியாமல் போன அதிகாரத்தினை கைப்பற்றவதற்காக நல்லாட்சி அரசாங்கத்தினால் 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக செயற்படமுடியாத நிலை காணப்பட்டது. எனவே நாட்டின் ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களை பெற்றுக் கொள்வதற்காகவே கடந்த ஆட்சியாளர்களினால் 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டது என்பதை சுட்டிக்காட்டுகின்றேன்.” – என்றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282