in

ஜனாதிபதியின் கொள்கை உரை குறித்து நாளை விவாதம் ஆரம்பம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் நிகழ்த்திய சிம்மாசன உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் நாளை இடம்பெற உள்ளது. 

கடந்த நாடாளுமன்ற சபை அமர்வு 3ஆம் திகதி சுமார் அரை மணித்தியாலமே இடம்பெற்றது. தொடர்ந்து அன்றைய தினம் முற்பகல் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்ட சபை அமர்வு மதியம் ஒரு மணிக்கு மீண்டும் ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணிக்கு நிறைவுற்றது.

இதேவேளை, முன்னதாக நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் நாளை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன் நாளை மறுதினமும் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.            

அசிதிசி ஊடக புலமைப்பரிசில் செயற்றிட்டத்துக்கான விண்ணப்பம் கோரல்

இலங்கை கிரிக்கெட் மீது சுவிஸ் நீதிமன்றில் வழக்கு!