in ,

ஜனாதிபதி, பிதரமரின் வாழ்த்து செய்திகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தமது வாழ்த்துச் செய்திகளை வௌியிட்டுள்ளனர்.

அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சிக்கு சிவராத்திரி தினம் ஔியூட்டட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வினூடாக ஐக்கியத்திற்கான தேடலில் மேலும் பலம்பெற இறையருள் துணை புரியட்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே மனிதனும் கடவுளும் ஒரே முனையில் சந்திக்கும் வரம் கொடுக்கும் சிவராத்திரி தினமாக இன்றைய தினம் அமையட்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்தியுள்ளார்.

இன்று மகா சிவராத்திரி

கார் ஒன்றுக்குள் எரிந்த நிலையில் சடலம்!