செய்திகள் பிரதான செய்தி

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; ரணில் முன் மொழிவார்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை இன்னும் இரு தினங்களுக்குள் முன்மொழிய பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

உட்கட்சிப் பூசல் மேலோங்கியிருந்த நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக இருந்த ஐந்து உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலக்கப்பட்டனர்.

இதனையடுத்து ரணில் விக்ரமசிங்கவிற்கு அழுத்தம் அதிகரித்தது. சுய நலனுக்காக கட்சியை பிளவுபடுத்த இடமளிக்க முடியாது என்று முன்வைக்கட்ட கருத்துக்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சஜித் பிரேமதாசவே பலமான நிலையில் இருக்கின்றார் என்று கிடைத்த தகவலின்படியே சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த ரணில் தீர்மானித்துள்ளார்.

இதன்படி கடந்த ஜனாதிபதித் தேர்தல்களின் போது பொது வேட்பாளர்களை நிறுத்தியது போல் இன்னும் இரு தினங்களில் சஜித் பிரேமதாசவை பொது ஜனாதிபதி வேட்பாளராக ரணில் முன்மொழியவுள்ளார்.

Related posts

மேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா!

G. Pragas

பாதிக்கப்பட்டோருக்காக அரச அதிபரிடம் உணவு பொருட்கள்

G. Pragas

தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலை பிரதமரிடம் கையளித்தார் சுமந்திரன்

G. Pragas