செய்திகள் பிந்திய செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலரை தூதரகங்கள் தீர்மானிக்கிறது

சில ஜனாதிபதி வேட்பாளர்களை தூதரகங்களே தீர்மானிக்கின்றது என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மகா சங்க மாநாடு கண்டியில் நேற்று (11) நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும்,

பொருளாதாரத்தின் தன்னிறைவைக் கையகப்படுத்த வேண்டிய செயற்பாட்டை முதலில் மேற்கொள்ள வேண்டும். பொருட்களை இறக்குமதி செய்யவும் கடனை செலுத்தவும் 6 பில்லியன் டொலர்கள் போதுமானது அல்ல. பொருட்களை இறக்குமதி செய்யவோ கடனை செலுத்தவோ கட்டாயமாக 600 கோடி டொலர்களைக் கடனாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். எனினும், இன்று உண்ணுவதற்கே கடன் பெற வேண்டியுள்ளது.

கடனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், கடன் தரும் நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு அடிபணிய நேரிடும் – என்றார்.

Related posts

வவுனியாவில் 6 சிறைக் கைதிகள் விடுதலை!

Tharani

தாமரை மொட்டு ஆகஸ்ட்க்கு பின்னர் கருகிப்போகும் – வேலுகுமார்

G. Pragas

புலித் தொடர்பு சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்

G. Pragas