செய்திகள் வவுனியா

ஜனாதிபதி வேட்பாளர் சீலரத்ன தேரர் வடக்கிற்கு விஜயம்

ஜனசெத முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் பத்திரமுல்லை சீலரத்ன தேரர் வவுனியா மற்றும் கிளிநொச்சிக்கு இன்று (27) விஜயம் செய்து மக்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

வவுனியா – இறம்பைக்குளம் பகுதியில் உள்ள சிறி துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்த அவர், அங்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் ஆலயத்தில் நின்ற மக்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது ஒரே குரலின் கீழ் பாதுகாப்பான நாட்டை உருவாக்க தனக்கு வாக்களிக்குமாறு கோரிய அவர், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் தான் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

குறித்த வழிபாட்டு நிகழ்வில் அவரது ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, குறித்த ஜனாதிபதி வேட்பாளரான சீலரத்ன தேரர் அண்மையில் யாழ்ப்பாணம் விமான நிலையம் தொடர்பில் இனவாத ரீதியில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சஜித் உள்ளிட்ட அமைச்சர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக உள்ளனர்

G. Pragas

மீராவோடை தாருஸ்ஸலாமில் இரத்த தான முகாம்

G. Pragas

நிதானமாக நின்று ஆடிய கோஹ்லி; இந்தியாவிற்கு வெற்றி

G. Pragas

Leave a Comment