செய்திகள் பிராதான செய்தி வவுனியா

ஜலானி பிரேமதாச தலைமையில் மகளிர் மாநாடு

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனையில் வவுனியாவில் மகளிர் ஒன்று கூடல் நிகழ்வு இன்று (05) நடைபெற்றது.

இதன்போது, வவுனியா மாவட்டத்தில் பெண்கள் அமைப்பின் தலைவிகள், கிராம மடட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள், பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பத் தலைவிகள் மற்றும் பல பெண்கள் கலந்துகொண்ட குறித்த மாநாட்டில் பெண்களுக்கான பல நலத்திட்டங்கள் தொடர்பாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இம்மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலானி பிரேமதாச, ரோசி சேனாநாயக்க, விஜயகலா மகேஸ்வரன், வவுனியா நகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் லரிப் அப்துல்பாரி, முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் முத்து முகமது உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

சம்பந்தன் மற்றும் ஹக்கீமுக்கு அடிபணிய மாட்டோம் – நாமல்

G. Pragas

எல்பிட்டிய பிரதேச சபையின் அனைத்து தொகுதியும் பெரமுன வசமானது

G. Pragas

யாழில் இடம்பெற்ற மோதலில் கத்திக் குத்து – மூவர் காயம்

G. Pragas

Leave a Comment