செய்திகள் பிரதான செய்தி மலையகம்

ஜீவனுக்கு எம்எஸ்டி பாதுகாப்பு; தே.வ.க நிலையம் முறையீடு!

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமனின் மகன் ஜீவன் தொண்டமனுக்கு எதிராக தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் (சி.எம்.இ.வி) அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவு (எம்எஸ்டி) தலைவருக்கு எழுத்துப்பூர்வமாக முறையிட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் ஜீவன், எம்எஸ்டி அதிகாரிகளை தவறாக பயன்படுத்தியதாக குறித்த நிலையம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுவரை அமைச்சராக இல்லாத ஜீவன், மறைந்த தனது தந்தையின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்ட எஸ்எஸ்டி பிரிவை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த நாட்களில் ஜீவன் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரங்களில் எம்.எஸ்.டி அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னாரில் மக்கள் காணிகளை அபகரிக்க முயற்சி

G. Pragas

மகாநாயக்கர்களிடம் ஆசீர்வாதம் பெற்ற முன்னாள் பிரதமர்

கதிர்

மரண தண்டனை தீர்மானத்திற்கு யாழில் 95% ஆதரவாம்

G. Pragas