in , ,

ஜோசப் ஆண்டகை விட்டுச் சென்ற சாட்சிய பணி தொடர வேண்டும் – பாப்பரசரின் பிரதிநிதி!

மறைந்த ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை விட்டுச் சென்ற சாட்சிய பணிகளை தொடர வேண்டும் என்று இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிரையன் உடைக்கே தெரிவித்தார்.

மேலும்,

ஜோசப் ஆண்டகை மன்னாரில் மிகப் பெரும் தொண்டாற்றினார். பல்சமய, சமூக மற்றும் சகவாழ்வு போன்வற்றை மேம்படுத்த ஜோசப் ஆண்டகை பணிபுரிந்துள்ளார்.

கடினமான காலகட்டத்தில் அர்ப்பணிப்போடு திருத்தூதராக பணியாற்றியமைக்கும், மனிதநேய செயற்பாட்டிற்கும் அவரை பாராட்டுகிறேன்.

ஆண்டகை விட்டுச் சென்ற மேன்மையான சாட்சிய வாழ்வு இந்த நாட்டிலும், திரு அவையிலும் தொடர வேண்டும்.

அன்பு, நீதி அமைதி, விட்டு கொடுத்தல், மனிதநேய முன்னேற்றம், நல்வாழ்வு போன்ற திரு அவையின் சேவைகள் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் தொடர பிராத்திக்கிறேன். – என்றார்.

மன்னார் பேராலயத்தில் ஜோசப் ஆண்டகையின் உடல் நல்லடக்கம்!

கொடிகாமத்தில் வாள் வெட்டு – ஒருவர் காயம்!